
பேராவூரணி கட்டிடப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், ‘கட்டுமான தொழில் துறையில் ஜிஎஸ்டி தாக்கம்’ குறித்த சிறப்புகருத்தரங்கம் பட்டுக்கோட்டை சாலையில்உள்ள மண்டபத்தில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.இக்கருத்தரங்கிற்கு பொறியாளர் சங்கத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்)ஏ.பாலசுப்பிரமணியன் கருத்துரையாற்றினார். இதில் சங்கச் செயலாளர் சந்திரமோகன், பொருளாளர் கலையரசன், உயர்மட்டக்குழு ஏ.சி.சி.ராஜா, பொறியாளர்கள் கோவிதரன், ஜெயக்குமார், குட்டியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: