Wednesday, September 27, 2017

உதவியை எதிர்நோக்கும் மாற்றுத்திறனாளி.



பேராவூரணியை அடுத்த நாடாகாடு பகுதியை சேர்ந்தவர் இராமையன் மகன் ராமு (37). போலியோ நோய் தாக்குதல் காரணமாக சிறு வயது முதலே இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, மூன்று சக்கர சைக்கிளை பயன்படுத்தியே நடமாடி வருகிறார்.இவருடைய பெற்றோர் பல காலத்திற்கு முன்பே இறந்துவிட்டனர். சகோதரர் ஒருவர் இருந்த போதும், அவரும் நோய்வாய்ப்பட்டு வறுமையில் வாடும் நிலையில் தனித்து விடப்பட்டுள்ளார். இந்நிலையில், கிடை க்கும் வேலைகளை செய்து கொண்டு, தருவ தை உண்டு வாழ்க்கையை நடத்தி வரு கிறார் மாற்றுத்திறனாளி ராமு. உடலில் தான்ஊனம் என்றாலும், மனதில் வைராக்கி யத்தோடு, தன்னால் முடிந்த வேலைகளை செய்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இப்பகுதி தென்னை சூழ்ந்த பகுதியாக இருப்பதால், கீற்று முடைதல், பக்கத்து நகர மான பேராவூரணி காய்கறிக் கடைகளில் காய்களை தரம் பிரித்து சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில் ஜீவனத்தை நடத்தி வருகிறார். அதுவும் காய்ச்சல், தலை வலியால் பாதிக்கப்படும்போது, அக்கம்பக்கத்தினர் ஏதும் கொடுத்தால் சாப்பிடுவார். இல்லையென்றால் பெரும்பா லும் பட்டினி தான் என்கின்றனர் இப்பகுதி யினர்.அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் வழங்கிய மூன்று சக்கர சைக்கிளும் பழுதடைந்துவிட்டதால், புதிய மூன்று சக்கர வாகனம் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்கிறார் ராமு. அரசு நிர்வாகத்தை அணுகவோ, நிதி யுதவி கேட்டுப் பெறவேண்டும் என்ற விபர மோ அறிந்திருக்கவில்லை மாற்றுத்திறனாளி யான ராமு.மாவட்ட நிர்வாகமோ, கருணை உள்ளம் கொண்ட தனி நபர்களோ இவ ருக்கு உதவலாம் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.... இவருக்கு உதவ விரும்புவோர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான மதிவா ணனை தொடர்பு கொள்ளலாம். செல்-99657 93734.

நன்றி:Jakubar Ali, தீக்கதிர்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: