பேராவூரணி வட்டார அளவில் நடை பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் மகேஷ்வரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.ஆகஸ்ட் 3, 4 ஆகிய தேதிகளில் பேராவூரணி வட்டார அளவில் குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் குழுப்போட்டி மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் சு.ராகேஸ்வரி, மு.திபாகரன் முதலிடத்தையும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரியா, பி.சதீஷ் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கவியரசன் (10 ஆம் வகுப்பு) 1500 மற்றும் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், மு.ராஜகவிதன் (10 ஆம் வகுப்பு) 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாவது இடமும், உயரம் தாண்டுதலில் முதலிடமும் பெற்றனர்.
9 ஆம் வகுப்பு மாணவர் பி.வரதன் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும் பெற்றனர். 10 ஆம் வகுப்பு மாணவர் பி.ராஜகவிதன் நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும் பெற்றார்.17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் யு.மீரா 3000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம், கோலூன்றி தாண்டுதலில் மூன்றாமிடமும், ஆ.நர்மதா 800 மீ ஓட்டத்தில் மூன்றாமிடமும், இலக்கியா உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் இரண்டாமிடம் பெற்றனர்.14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் குழுப்போட்டி (வளையப்பந்து) ஒற்றையர், இரட்டையர் பிரிவில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பி.கௌசிகன், பு.அரிசங்கர், என்.ஸ்ரீகௌரி, பிரியதர்சினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் குழுப்போட்டியில் (வளையப்பந்து) ஒற்றையர், இரட்டையர் பிரிவில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பி.கோபிநாத், மு.ராஜகவிதன் முதலிடம் பெற்றனர்.
மாவட்ட அளவில் வளையப்பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஒற்றையர் பிரிவில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பி.கௌசிகன் முதலிடம்,என். ஸ்ரீகௌரி இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் 7 ஆம் வகுப்பு மாணவர்கள் பி. கௌசிகன்,பு.அரிசங்கர் இரண்டாமிடமும் பெற்றனர்.17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் பிரிவில் 10 ஆம் வகுப்பு மாணவர் மு.ராஜகவிதன் இரண்டாமிடம், இரட்டையர் பிரிவில் பி.கோபிநாத், மு.ராஜகவிதன் முதலிடமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மகேஷ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Sunday, August 13, 2017
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: