மொய்விருந்து: போதிய மொய் எழுத்தர்கள் கிடைக்காமல் அவதி
பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதியில் ஆடி, ஆவணி மாதங்களில் பிரபலமான விழா என்றால் அது மொய் விருந்து விழா தான். இந்த ஒரு சீசனில் மட்டும் சுமார் ஆயிரம் பேர் மொய் விருந்து நடத்துவார்கள். அதற்காக 50 டன் வரை ஆட்டுக்கறி விருந்து கொடுத்து சுமார் ரூ. 500 கோடி வரை பணம் வசூலாகும்.
இதே போல ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் ஒரே பந்தலில் 15 முதல் 25 நபர்கள் வரை மொய் விருந்து நடத்துவதும் இதே பொல ஒவ்வொரு கிராமத்திலும் நடத்தப்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்த 2 மாதங்களிலும் மொய் வரவு செலவில் உள்ளவர்களுக்கு வேறு வேலைகளை கவணிப்பதில் சிக்கல் ஏற்படும்.
இந்த நிலையில் மொய் விருந்துகள் பரபரப்பாக போய் கொண்டிருக்கும் போது ஆகஸ்ட் 6, மற்றும் 7 ந் தேதிகளில் மட்டும் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், அரங்கங்கள், திடீர் பந்தல்கள் அனைத்திலும் மொய் விருந்துகள் நடத்த பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களில் மட்டும் சுமார் 300 பேர் மொய் விருந்து நடத்த உள்ளனர்.
மேலும் 300 பேருக்கும் மொய் எழுதும் மொய் எழுத்தர்கள் குறைவாக இருப்பதால் எழுத்தர்கள் கிடைக்காமல் அருகில் உள்ள வேம்பங்குடி, பைங்கால் போன்ற கிராமங்களில் இருந்தும் மொய் எழுத்தர்களை அழைத்துள்ளனர். ஒரு நாள் மொய் எழுத எழுத்து கூலி ரூ. 700 முதல் 800 வரை இந்த எழுத்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இரு நாட்களில் மட்டும் 300 பேர் மொய் விருந்து நடத்தப்படுவதால் மொய் செய்பவர்களும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
0 coment rios: