பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பேராவூரணி அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவில் ஏராளமான பக்தர்கள் வழி பட்டனர்.பேராவூரணி ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவிலில் களைகட்டிய ஆடிப்பெருக்கு. புது மண தம்பதிகள் திரளானோர் பங்கேற்பு.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, பேராவூரணி ஏந்தல் அருள்மிகு ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில் குளக்கரையின் படித்துறைகளில் ஏராளமான சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள், குழந்தைகள் காவிரியை வழிபட்டு, காப்பரிசி, இனிப்புகள், பழங்கள் வைத்து படைத்து, மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டனர்.
புதுமணத் தம்பதிகள் தங்களது திருமணத்தின் போது அணிந்து கொண்ட மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி, அதை ஆடிப்பெருக்கு விழாவின்போது கொண்டு வந்து குளத்தில் விடுவது வழக்கம். அதேபோல, ஆடி 18 முன்னிட்டு புதுமணத் தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் விட்டு தாலிகயிற்றை பிரித்து புதிதாக அணிந்துகொண்டனர். இதையொட்டி, குளக்கரையின் இருபுறங்களில் உள்ள படித்துறைகளில் ஏராளமான பெண்கள் கூடியதால், அப்பகுதி முழுவதும் திருவிழா போல காட்சியளித்தது.
0 coment rios: