பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்: பாஜ கூட்டத்தில் வலியுறுத்தல்.
பேராவூரணியில் ஒன்றிய பாஜ நிர்வாகிகள் கூட்டம் துணைத்தலைவர் சிவனேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, மாவட்ட துணைத்தலைவர் பெரியநாயகி, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்தாமரை வெங்கடேஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு மாணவிகள் விடுதிக்கு அருகில் பொதுமக்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் 3 டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகளை போதிய அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
பேராவூரணியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி பொறுப்பாளர் சோமசிவகுமார், வக்கீல் அணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பிரசார அணி மாவட்ட தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்பாளர் பொன்னிவளவன் பங்கேற்றனர்.
Source :Dinakaran
0 coment rios: