Tuesday, August 8, 2017

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 08.

ஆகஸ்டு 08 (August 08) கிரிகோரியன் ஆண்டின் 220 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 221 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 145 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனாக முடிசூடினான். இவனது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
1768 – ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை பிளைமவுத்தில் இருந்து ஆரம்பித்தான்.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜோன்ச்ன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தான். இந்நாள் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்னசியின் ஆபிரிக்க அமெரிக்கர்களினால் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1942 – இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் ஜப்பான் மீது போரை அறிவித்து மன்சூரியா நகரினுள் ஊடுருவியது.
1945 – ஐநா சாசனம் ஐக்கிய அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐநாவில் இணைந்த மூன்றாவது நாடு இதுவாகும்.
1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகாரம் பெற்றது.
1963 – இங்கிலாந்தில் இடம்பெற்ற பெரும் தொடருந்துக் கொள்ளையில் 15 பேரடங்கிய கொள்ளையர் குழு 2.6 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன் பணத்தைக் கொள்ளையடித்தது.
1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1973 – தென் கொரிய அரசியல்வாதி (பின்னர் தென் கொரிய அதிபர்) கின் டாய்-ஜுங் கடத்தப்பட்டார்.
1974 – வாட்டர்கேட் ஊழல்: ஐக்கிய அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
1988 – மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.
1989 – ஓர் இரகசிய இராணுவ விண்வெளித் திட்டத்தை முன்னெடுத்து நாசா கொலம்பியா விண்ணோடத்தை விண்ணுக்கு அனுப்பியது.
1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1992 – யாழ்ப்பாணம், அராலியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் இலங்கை இராணுவ வட பிராந்தியத் தளபதி கொப்பேக்கடுவ கொல்லப்பட்டார்.
2000 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினரின் எச். எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலினுள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
2006 – திருகோணமலைக்கு வடக்கே வெல்வெறிப் பகுதியில் கிளைமோர் தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 – நாசா விண்வெளி ஆய்வு மையம் என்டெவர் விண்ணோடத்தை கிறிஸ்டினா மெக்காலீப் என்ற ஆசிரியர் உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது.

பிறப்புக்கள்

1924 – அ. ந. கந்தசாமி, ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் (இ. 1968)
1927 – எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (இ. 2009)
1941 – டிரோன் பர்னான்டோ, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
1948 – ஸ்வெட்லானா சவீத்ஸ்கயா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை
1981 – ரொஜர் ஃபெடரர், சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்

இறப்புகள்

1909 – மேரி மக்கிலொப், ஆத்திரேலிய அருட்சகோதரி, புனிதர் (பி. 1842)
1946 – உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1867)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: