Saturday, August 5, 2017

வரலாற்றில் இன்று ஆகஸ்டு 05.

ஆகஸ்டு 5 (August 5) கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1100 – இங்கிலாந்து மன்னனாக முதலாம் ஹென்றி முடி சூடினான்.
1305 – இங்கிலாந்துக்கு எதிராகக் கிளர்ச்சிக்குத்தலைமை வகித்த வில்லியம் வொலஸ் கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜோன்ஸ், நியூபவுண்லாந்தில் அமைத்தார்.
1689 – 1,500 இரக்கேசுக்கள் கியூபெக்கின் லாச்சின் நகரைத் தாக்கினர்.
1806 – இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் அரசியல் நிர்ணய சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.
1870 – புருசியர்களுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் புருசியா வெற்றி பெற்றது.
1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.
1914 – ஐக்கிய அமெரிக்காவும் பனாமாவும் கூட்டாக பனாமாக் கால்வாய் ஒப்பந்தத்தைல் கைச்சாத்திட்டன.
1940 – இரண்டாம் உலகப் போர்: லாத்வியா சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ட்ரொய்னா என்ற இடத்தில் போர் இடம்பெற்ற போது காலை 11:00 மணிக்கு எட்னா மலை வெடித்தது. இதன் புகை மண்டலம் பல மைல் உயாரத்துக்குக் கிளம்பியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 545 ஜப்பானிய போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் செல்ல எத்தனித்தனர்.
1944 – போலந்து தீவிரவாதிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்த ஜேர்மனிய தொழிற் பண்ணையொன்றில் இருந்து 348 யூதர்களை விடுவித்தனர்.
1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6000 பேர் கொல்லப்பட்டனர். 50 நகரங்கள் அழிந்தன.
1960 – புர்கினா பாசோ (அப்பர் வோல்ட்டா) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962 – 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்ஜெலீசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1963 – ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.
1969 – மரைனர் 7 செவ்வார்க் கோளிக்கு மிகக் கிட்டவாக (3,524 கிமீ) சென்றது.
1979 – ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.
1989 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.
2003 – இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.
2006 – வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஆகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

1850 – மாப்பசான், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1893)
1898 – கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, வயலின் இசைக்கலைஞர் (இ. 1970)
1908 – ஹரல்ட் ஹோல்ட், ஆஸ்திரேலியாவின் 17வது பிரதமர் (இ. 1967)
1923 – தேவன் நாயர், சிங்கப்பூர் அதிபர்
1930 – நீல் ஆம்ஸ்ட்றோங், சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர்
1968 – மரீன் லெ பென், பிரெஞ்சு அரசியல்வாதி
1975 – கஜோல், இந்தித் திரைப்பட நடிகை
1987 – ஜெனிலியா, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1895 – பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியத் தத்துவவியலாளர் (பி. 1820)
1962 – மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (பி. 1926)
1984 – றிச்சார்ட் பேர்ட்டன், ஆங்கிலேய நடிகர் (பி. 1925)
1991 – சொயிச்சீரோ ஹொண்டா, ஹொண்டா நிறுவனத்தின் தாபகர் (பி. 1906)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ – விடுதலை நாள் (1960)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: