குண்டும் குழியுமான போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் அமைந்துள்ள ரெட்டவயல்- பெருமகளூர் சாலையை சீரமைத்து தரவும்,புதிய தரமான சாலை அமைக்கவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பூக்கொல்லை வழியாகரெட்டவயல்- பெருமகளூர் மார்க்கத் தில் மாநில அரசின் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகவே எந்த மறுசீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படாததால், சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமாக பள்ளம், படுகுழியாக போக்குவரத்திற்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது.சாலை மறுசீரமைப்பு பணிகளுக் காக கடந்த ஆண்டே ஒப்பந்தம் விடப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுவரை எவ்வித மராமத்துப் பணிகளோ மேற்கொள்ளப் படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் கிராமமக்களை திரட்டி சாலை மறியல் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.இது தொடர்பாக பொதுமக்கள் சார்பாக மணக்காடு ஊராட்சியை சேர்ந்த வழக்கறிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான வீ.கருப்பையா மற்றும் ரெட்டவயல் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.கே.கண்ணன் ஆகியோர் பேராவூரணி உட்கோட்ட நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளரை நேரில்சந்தித்து சாலைகளை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இதுகுறித்து கடந்த மே 6 -ம் தேதிதீக்கதிரில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரெட்டவயல் முதல் பெருமகளூர் தாண்டி தஞ்சை மாவட்ட எல்லையான ஆதியாகுடி வரை சுமார் 6 கிமீ தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் நன்றி தீக்கதிரில் செய்தி வெளியானதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த சாலையை பார்வையிட்டு, புதிய சாலைஅமைக்க கருத்துரு அனுப்பியிருந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிய தார்ச்சாலையை உடனடியாக அமைத்தனர். இதனால் இப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்தது. இதுகுறித்து ரெட்டவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் ஏ.கே.கண்ணன் கூறுகையில், “பல ஆண்டுகள் பிரச்சனை தீக்கதிரில் செய்திவெளியானதும் தீர்வை எட்டியுள்ளது.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: