கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராசரின் 115 ஆவது பிறந்த நாளானது கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் கு.மகேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் நா.நடராஜன், இரா.கார்த்திகேயன், அ.பரக்கத் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.கே.ராமமூர்த்தி ஆகியோர் காமராசரின் பெருமைகளை எடுத்துக் கூறினர். மேலும் இந்நிகழ்ச்சியில் பேராவூரணி அரிமா சங்கத் தலைவர் பொறியாளர் ஜெயக்குமார் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அரிமா சங்க செயலாளர் எஸ்.ராமநாதன் மற்றும் பொருளாளர் ஊ.துரையரசன் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரிமா சங்கம் மூலமாக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களும் மாணவர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டன.
நன்றி : தீக்கதிர்
0 coment rios: