ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தின விழாவை யொட்டிப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.பேராவூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (கிழக்கு) வங்கி தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வங்கி முதுநிலை கிளை மேலாளர் செல்வக் கணேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மாலதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுபாஷ் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மல்லிகை வை.முத்துராமலிங்கம், திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வேலு, வங்கி அதிகாரிகள் மணிகண்டன், ஹரீஷ், வங்கி முகவர்கள் பாரி வளவன், தீபம் ஆர்.நீலகண்டன், பாலசுப்பிரமணியன், சத்துணவு அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சுபா நன்றி கூறினார்.
நன்றி : தீக்கதிர்
நன்றி : தீக்கதிர்
0 coment rios: