தஞ்சை மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 23 ஊராட்சிகளில் வரும் 6ம் தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் ஆலக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கல்யாணபுரம்2ம் சேத்தி, அள்ளூர் ஆகிய ஊராட்சிகளிலும், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சானூரப்பட்டி, வெண்டையம்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும்,
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் ராகவாம்பாள்புரம், பொய்யுண்டார்கோட்டை ஆகிய ஊராட்சிகளிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் வெட்டுவாக்கோட்டை, நெய்வேலி வடக்கு ஆகிய ஊராட்சிகளிலும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாராஜபுரம் ஊராட்சியிலும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் இஞ்சிக்கொல்லை, மேலையூர் ஆகிய ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் மணலூர் ஊராட்சியிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கபிஸ்தலம், உம்பளப்பாடி ஆகிய ஊராட்சிகளிலும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அருந்தவபுரம் ஊராட்சியிலும்,
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புதுக்கோட்டை உள்ளுர், ஆலடிக்குமுளை ஆகிய ஊராட்சிகளிலும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆலத்தூர் ஊராட்சியிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம் ஆகிய ஊராட்சிகளிலும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊமத்தநாடு ஊராட்சியில் வரும் 6ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
0 coment rios: