பேராவூரணி நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியம் மற்றும் நகரக்கிளை சார்பில் வெள்ளிக்கிழமையன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். நகரத் துணைச்செயலாளர் ஆர்.நீலமோகன் முன்னிலை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையா, ஒன்றியச் செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும். அரசு மருத்துவமனையை சீர்படுத்த வேண்டும். போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். தட்டுப்பாடின்றி குடிநீர், தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
ரேசன்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.மாணிக்கம், எஸ்.பாஸ்கர், கே.வீரமுத்து, பி.மாரிமுத்து, நகரக்குழு உறுப்பினர் எஸ்.ஜகுபர்அலி மற்றும் 70 பெண்கள் உட்படநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கடைவீதியில் இருந்து ஊர்வலமாக வந்து,நூறுநாள் வேலை கேட்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நன்றி : தீக்கதிர்

0 coment rios: