பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி, பெண்களுடன் ஜூன் 28 இல் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்துள்ளது.
ஜனநாயக மாதர் சங்கத்தின் பெருமகளூர் கிளை அமைப்புக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிளைத் தலைவராக ராமாமிர்தம், செயலாளராக தவமணி, பொருளாளராக செல்வி, துணைத் தலைவராக குப்பம்மாள், துணைச் செயலாளராக பானு உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், பெருமகளூர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி, ஜூன் 28 இல் முற்றுகைப் போராட்டம் நடத்துவது. பெருமகளூர் பேரூராட்சி பகுதிக்கு நூறு நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
பெருமகளூர் ஆர்.கே.நகர் பகுதியில் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாதர் சங்க நிர்வாகிகள் அஞ்சம்மாள், உமாராணி, விமலா, கெங்கையம்மாள், தனபாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி:தினமணி
0 coment rios: