10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், நேற்றிரவு இறுதிப்போட்டி அரங்கேறியது. ஐதராபாத்தில் நடந்த மகுடத்துக்கான இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். நடப்பு தொடரில் இங்கு முதலில் பேட் செய்த அணிகளே அதிகமான வெற்றி பெற்றிருப்பதால் இந்த முடிவுக்கு அவர் வந்தார்.
பந்து வீச்சில் மிரட்டல்
இதன்படி விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலும், லென்டில் சிமோன்சும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இறுதிப்போட்டிக்கே உரிய பதற்றம் அவர்கள் ஆடிய விதத்தில் காணமுடிந்தது. அதை சாதகமாக பயன்படுத்தி புனே பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் பார்த்தீவ் பட்டேல் (4 ரன்) கேட்ச் ஆனார். அதே ஓவரில் சிமோன்சும் (3) வீழ்ந்தார். சிமோன்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பந்து வீசிய உனட்கட் ஒற்றைக்கையால் சூப்பராக பிடித்து மெய்சிலிர்க்க வைத்தார்.
அடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும், அம்பத்தி ராயுடுவும் ஜோடி சேர்ந்தனர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் பந்து பெரிய அளவில் எழும்பவில்லை. முதல் 5 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுக்கு 16 ரன்களுடன் பரிதவித்தது. 6-வது ஓவர் தான் அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது. லோக்கி பெர்குசன் வீசிய அந்த ஓவரில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி விரட்டினார். இருப்பினும் அந்த மகிழ்ச்சியும் நெடு நேரம் நிலைக்கவில்லை. ராயுடு 12 ரன்னில், ஸ்டீவன் சுமித்தால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் ரோகித் சர்மா (24 ரன், 22 பந்து, 4 பவுண்டரி), அடுத்து வந்த கீரன் பொல்லார்ட் (7 ரன்) இருவரின் விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கபளகரம் செய்ய மும்பை அணி நிலைகுலைந்து போனது.
மும்பை 129 ரன்
பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் புனே அணியினர் ஆக்ரோஷமாக செயல்பட்டனர். இதனால் மும்பை பேட்ஸ்மேன்களால் எளிதில் ரன் எடுக்க இயலவில்லை. ஹர்திக் பாண்ட்யா (10 ரன்), கரண் ஷர்மாவும் (1 ரன்) சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.
79 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை (14.1 ஓவர்) தாரைவார்த்து விழிபிதுங்கிய மும்பை அணிக்கு குணால் பாண்ட்யாவும், மிட்செல் ஜான்சனும் உயிர் கொடுத்தனர். இவர்கள் தாக்குப்பிடித்து ஆடியதுடன், கடைசி கட்டத்தில் கொஞ்சம் அதிரடி காட்டியதால் ஸ்கோர் கவுரவமான நிலைக்கு உயர்ந்தது. இரண்டு சிக்சர்களை பறக்க விட்ட குணால் பாண்ட்யா (47 ரன், 38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. ஜான்சன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் அந்த அணி 37 ரன்கள் சேகரித்தது. புனே தரப்பில் உனட்கட், ஆடம் ஜம்பா, டேனியல் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டோனி ஏமாற்றம்
அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி புனே அணி ஆடியது. இலக்கு குறைவு என்பதால் புனே வீரர்கள் நிதானமாக ஆடினர். அதுவே ஒருகட்டத்தில் நெருக்கடியாக மாறியது. ராகுல் திரிபாதி 3 ரன்னிலும், ரஹானே 44 ரன்னிலும் (38 பந்து, 5 பவுண்டரி), டோனி 10 ரன்னிலும் (13 பந்து, ஒரு பவுண்டரி) வெளியேறினர். மிடில் ஓவர்களில் மும்பை பந்து வீச்சாளர்கள் பிடியை இறுக்கியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு முனையில் கேப்டன் ஸ்டீவன் சுமித் மட்டும் மனம் தளராமல் போராடினார்.
கடைசி 2 ஓவர்களில் புனேயின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் சுமித் ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 12 ரன்கள் வந்தது.
ஒரு ரன்னில் முடிவு
இதையடுத்து கடைசி ஓவரில் புனேக்கு 11 ரன்கள் தேவையாக இருந்தது. களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது. ஸ்டீவன் சுமித்தும், மனோஜ் திவாரியும் களத்தில் நின்றனர். 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட திவாரி பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டார். 2-வது பந்தில் திவாரி (7 ரன்) பொல்லார்ட்டிடம் கேட்ச் ஆனார்.
3-வது பந்தை சந்தித்த கேப்டன் ஸ்டீவன் சுமித் (51 ரன், 50 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) தூக்கியடித்த போது அவரும் கேட்ச் ஆகிப்போனார். 4-வது பந்தில் ஒரு ரன் வந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்தார். கடைசி பந்தில் புனேயின் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டன. திக்...திக்... நிறைந்த இறுதி பந்தில் டேனியல் கிறிஸ்டியன் 2 ரன் எடுத்து விட்டு 3-வது ரன்னுக்காக ஓடிய போது ரன்-அவுட் செய்யப்பட்டார்.
புனே அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை ருசித்தது. இவ்வளவு குறைந்த ஸ்கோருடன் ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். மும்பை அணி ஏற்கனவே 2013, 2015-ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருந்தது. இதன் மூலம் மூன்று முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையை அந்த அணி நிகழ்த்தியது.
ஸ்கோர் போர்டு
மும்பை இந்தியன்ஸ்
சிமோன்ஸ் (சி) அண்ட்
(பி) உனட்கட் 3
பார்த்தீவ் பட்டேல் (சி)
தாகுர் (பி) உனட்கட் 4
அம்பத்தி ராயுடு(ரன்-அவுட்) 12
ரோகித் சர்மா (சி) தாகுர்
(பி) ஜம்பா 24
குணால் பாண்ட்யா (சி)
ரஹானே (பி) கிறிஸ்டியன் 47
பொல்லார்ட் (சி) திவாரி
(பி) ஜம்பா 7
ஹர்திக் பாண்ட்யா எல்.பி.டபிள்யூ
(பி) கிறிஸ்டியன் 10
கரண் ஷர்மா (ரன்-அவுட்) 1
மிட்செல் ஜான்சன்(நாட்-அவுட்) 13
எக்ஸ்டிரா 8
மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 129
விக்கெட் வீழ்ச்சி: 1-7, 2-8, 3-41, 4-56, 5-65, 6-78, 7-79, 8-129
பந்து வீச்சு விவரம்
உனட்கட் 4-0-19-2
வாஷிங்டன் சுந்தர் 4-0-13-0
ஷர்துல் தாகுர் 2-0-7-0
லோக்கி பெர்குசன் 2-0-21-0
ஆடம் ஜாம்பா 4-0-32-2
டேனியல் கிறிஸ்டியன் 4-0-34-2
புனே சூப்பர் ஜெயன்ட்
ரஹானே (சி) பொல்லார்ட்
(பி) ஜான்சன் 44
திரிபாதி எல்.பி.டபிள்யூ
(பி) பும்ரா 3
ஸ்டீவன் சுமித் (சி) ராயுடு
(பி) ஜான்சன் 51
டோனி (சி)பட்டேல்(பி)பும்ரா 10
மனோஜ் திவாரி (சி)
பொல்லார்ட் (பி) ஜான்சன் 7
டேனியல் கிறிஸ்டியன்
(ரன்-அவுட்) 4
வாஷிங்டன் சுந்தர்
(நாட்-அவுட்) 0
எக்ஸ்டிரா 9
மொத்தம் (20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு) 128
விக்கெட் வீழ்ச்சி: 1-17, 2-71, 3-98, 4-123, 5-123, 6-128
பந்து வீச்சு விவரம்
குணால் பாண்ட்யா 4-0-31-0
ஜான்சன் 4-0-23-3
பும்ரா 4-0-26-2
மலிங்கா 4-0-21-0
கரண் ஷர்மா 4-0-18-0
இறுதிப்போட்டியில் குறைந்த ஸ்கோர்
* மும்பை எடுத்த 129 ரன்களே, ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த ஒரு அணியின் குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன்பு 2009-ம்ஆண்டு இறுதி ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 143 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் குறைந்த பட்சமாகும்.
* ஐ.பி.எல். இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற இளம் வீரர் என்ற பெருமைக்குரிய 17 வயதான புனே சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார். இவர் சென்னையைச் சேர்ந்தவர்.
* இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் பொல்லார்ட் ஒரு சிக்சர் அடித்தார். அது இந்த சீசனின் 700-வது சிக்சராக அமைந்தது.10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், நேற்றிரவு இறுதிப்போட்டி அரங்கேறியது. ஐதராபாத்தில் நடந்த மகுடத்துக்கான இந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் மோதின. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

* இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் பொல்லார்ட் ஒரு சிக்சர் அடித்தார். அது இந்த சீசனின் 700-வது சிக்சராக அமைந்தது.
0 coment rios: