பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் மொபைல் வாடிக்கையாளர்களுக்குப் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் ச.வி. வினோத் தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். அரசுப் பொது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை (டிச.18) முதல் வருகிற 2017 ஆம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி வரை 90 நாள்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
இதில், கோம்போ - 339 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 339 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் அனைத்து மொபைல் எண்களுக்கும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் ஒரு ஜி.பி.
டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது.
கோம்போ - 139 என்ற திட்டத்தின் மூலம் ரூ. 139 செலுத்தி 28 நாள்களுக்கு அகில இந்திய அளவில் பி.எஸ்.என்.எல். எண்களுக்குள் மட்டும் அளவில்லா அழைப்புகள் பேசலாம். மேலும், இத்துடன் 300 எம்.பி. டேட்டா இலவசமாக வழங்கப்படும்.
இந்தச் சிறப்புக் கட்டணச் சேவையைத் தாங்களாகவே சி - டாப்அப் மூலமாகவும், வாடிக்கையாளர் சேவை மையம், பி.எஸ்.என்.எல். வெப் போர்டல் மூலமாகவும் பெறலாம்.
0 coment rios: