பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வரும் நிலையில் தற்போது பரவலாக தண்ணீர் தேங்க ஆரம்பித்ததும் கொசுவின் உற்பத்தி பெருகி வருகிறது. இதன் மூலமாக டெங்கு பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாமே எடுக்க வேண்டியதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை தடவிக்கொள்வது நல்லது.
கொசுக்கடியில் இருந்து காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினி தேங்காய் எண்ணெய் ஆகும். டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது. எனவே, டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதற்குத் தகுந்தாற் போல ஆடைகளை அணிவது நல்லது எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
0 coment rios: