வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, மக்கள் தங்கள் கைகளில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கைகளில் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இதனை தெரிவித்தார். எனவே வங்கிகளில் இன்று பழைய பணத்தை மாற்றுவோர் ரூ.4500-ஐ ரொக்கமாக பெறலாம். ஆனால் நாளை முதல் பணத்தை மாற்றுவோரின் கைகளில் ரூ.2000 மட்டுமே ரொக்கமாக வழங்கப்படும்.
0 coment rios: