Wednesday, November 30, 2016

தஞ்சாவூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தஞ்சாவூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  'நாடா' புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்.


பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 பைசா குறைத்தும், டீசல் விலையை லிட்டருக்கு 12 பைசா உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை: 5 கடலோர மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை.

புயல் எச்சரிக்கை: 5 கடலோர மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை.


தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த புயல் சின்னத்தால் டிசம்பர் 2ம் தேதி முதல் அனேக இடங்களில் பெரும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். இந்த புயலுக்கு நாடா (NADA) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாடா புயல் எச்த்ச்சரிக்கை காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 2 வானூர் மரக்காணம் தாலுக்காக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத்து

Tuesday, November 29, 2016

Monday, November 28, 2016

பேராவூரணியில் 2 நாள் விடுமுறைக்குப் பின செயல்படும் ஏடிஎம்.

பேராவூரணியில் 2 நாள் விடுமுறைக்குப் பின செயல்படும் ஏடிஎம்.



2 நாள் விடுமுறைக்குப் பின் வங்கிகள் திறக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான ATM-கள் செயல்படவில்லை.

செயல்பாட்டில் உள்ள ஒரு சில ATM-களிலும் 2,000 ரூபாய் நோட்டு மட்டுமே கிடைப்பதால் மக்கள் அதிருப்தி.


Sunday, November 27, 2016

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நவ. 30.

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நவ. 30.


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது: இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை நவ.
30-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னர் மனுக்களை அளிக்க வேண்டும்.
பேராவூரணியை அடுத்த ஒட்டங்காட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை.

பேராவூரணியை அடுத்த ஒட்டங்காட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை.


பேராவூரணியை அடுத்த ஒட்டங்காட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறுகிறது..

Saturday, November 26, 2016

பேராவூரணியில் திருக்குறள் மாநாடு புகைப்படம் தொகுப்பு.

பேராவூரணியில் திருக்குறள் மாநாடு புகைப்படம் தொகுப்பு.










பேராவூரணியில் திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் மாநாடு- 2047 வெள்ளியன்று பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ்.விழா அரங்கில் திருக்குறள் பேரவை தலைவர் திருக்குறள் சித்தர் மு.தங்கவேலனார் தலைமையில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 1000 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற ' திருக்குறள் பரப்புரை பேரணி'யை வட்டாட்சியர் தங்க.பிரபாகரன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

விழா அரங்கில் மருத்துவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்  டாக்டர் ஏ.காந்தி, வட்டார மருத்துவ அலுவலர்  டாக்டர் வி.சௌந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் குருதிக் கொடை முகாமை வள்ளலார் சங்கங்களின் பொறுப்பாளர் ஏ.வீ.ஏகாம்பரம் தொடங்கி வைத்தார். இதில் 60 பேர் குருதிக் கொடை செய்தனர். தானமாக பெறப்பட்ட இரத்த யூனிட்கள்  பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பள்ளத்தூர் நாவலரசன் தலைமையில் கலைமாமணி புதுகை சுகந்தி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 கல்வித்துறையில் சாதனையாளருக்கான விருது கொன்றைக்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு,  திருக்குறள் பேரவை செயற்குழு உறுப்பினர் எச்.சம்சுதீன் தலைமையில், கல்வியாளர் காந்தி லெனின் வழங்க கொன்றைக்காடு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி பெற்றுக் கொண்டனர்.

பொதுக்கல்விக்கான மாநில மேடை தலைவர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு சொற்பொழிவாற்றினார். மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த மாதம் திருக்குறள் பேரவை சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக திருக்குறள் பேரவை செயலாளர் பேரா கி.புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில்  வர்த்தக சங்க தலைவர் பி.எஸ்.அப்துல்லா, பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் வி.என்.பக்கிரிசாமி, தமபுக பொதுச்செயலாளர் அரங்க.குணசேகரன், வெங்கடேசுவரா கல்லூரி முதல்வர்,  தலைமையாசிரியர்கள் வீ.மனோகரன், என்.பன்னீர்செல்வம், சி.கஜானாதேவி மற்றும் குழ.செ.அருள்நம்பி, ஆர்.பி.ராஜேந்திரன், கே.வி.கிருஷ்ணன்,  சித.திருவேங்கடம், ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன்,  தா.கலைச்செல்வன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக

பேரவை பொருளாளர் ஆயர் த.ஜேம்ஸ் நன்றி கூறினார்.

நன்றி : மெய்ச்சுடர்


பேராவூரணி நகர்புற சாலையில் தேங்கியிருந்த மணல் அகற்றும் பணி.

பேராவூரணி நகர்புற சாலையில் தேங்கியிருந்த மணல் அகற்றும் பணி.


பேராவூரணி சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டது. பேராவூரணி கடைவீதி சாலைகளில் மணல் மற்றும் மண் தேங்கியிருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மணலில் சறுக்கி கீழே விழுவதும், மண் துகள்கள் கண்ணில்பட்டு விபத்து ஏற்படுவதுமாக இருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மணலை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 
பேராவூரணி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து தேங்கியிருந்த மணல் அகற்றப்பட்டது. 

Friday, November 25, 2016

பேராவூரணி எஸ்.எம்.ஜே.இண்டேன் கேஸ் ஏஜென்ஸிஸ் முக்கிய அறிவிப்பு.

பேராவூரணி எஸ்.எம்.ஜே.இண்டேன் கேஸ் ஏஜென்ஸிஸ் முக்கிய அறிவிப்பு.



இண்டேன் எரிவாயு வாடிக்கயாளர்களுக்கு ஆதார் அட்டை எண் கேஸ் இணைப்புடன் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2016.
இதுவரை ஆதார் எண் செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும்.
தவறினால் தங்களுடைய கேஸ் இணைப்பு மானியத் தொகை பெற இயலாது எனவே உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.
பேராவூரணி நகர்புற பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏடிஎம் பணம் எடுப்பதற்காக
மக்கள் அவதி.

பேராவூரணி நகர்புற பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏடிஎம் பணம் எடுப்பதற்காக மக்கள் அவதி.


மின்சாரம் வசதி இன்றி ஏடிஎம் பணம் எடுப்பதற்காக காத்திருக்கும் பொதுமக்கள். 
பேராவூரணி ஏடிஎம்கள் முன் மக்கள் வரிசையில் காத்திருப்பு.

பேராவூரணி ஏடிஎம்கள் முன் மக்கள் வரிசையில் காத்திருப்பு.


பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி  ஏடிஎம் பணம் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள். பேராவூரணி  ஐசிஐசிஐ பேங்க் அருகில்  இயங்கிவரும்  ஏடிஎம் மையத்தில் தற்போது 2000 ரூபாய் நோட்டுகள்  கிடைக்கிறது.   

Wednesday, November 23, 2016

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்.


அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க்குகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாளாகும். வரி, மின்கட்டணம் செலுத்தவும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பயன்படுத்த இன்று கடைசி நாள்.
பேராவூரணி பாரத ஸ்டேட் ஏடிஎம் பணம் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

பேராவூரணி பாரத ஸ்டேட் ஏடிஎம் பணம் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.






பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி இரண்டு ஏடிஎம் பணம் வருகிறது. பேராவூரணி  ஐசிஐசிஐ பேங்க் அருகில்  இயங்கிவரும்  ஏடிஎம் மையத்தில், புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள  ஏடிஎம் மையத்தில்  தற்போது 2000 ரூபாய் நோட்டுகள்  கிடைக்கிறது.   

Tuesday, November 22, 2016

பேராவூரணி ஆவணம் சாலையை உடனடியாக சீரமைக்க சிபிஎம் கோரிக்கை.

பேராவூரணி ஆவணம் சாலையை உடனடியாக சீரமைக்க சிபிஎம் கோரிக்கை.


தீக்கதிர் : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் ஆவணம் சாலையில் பெரியகுளம் பெட்ரோல் பங்க் முதல் செங்கமங்கலம் கடைவீதி வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து, போக்குவரத்திற்கு பயனற்றதாக உள்ளது என்றும் அதனை உடன டியாக சீரமைக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பெட்ரோல் பங்க் முதல் செங்கமங்கலம் கடைவீதி வரை சுமார் 2 கி.மீ தொலைவிற்கு புதிய சாலைப் பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்டும், ஒப்பந்ததாரர் பணியை தொடங்காமல் இருப்பதாகவும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் எழுந்தன. உடனடியாக பணிகள் தொடங்கப்படாவிட்டால் சாலைமறியல் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தீக்கதிரிலும் விரிவான செய்தி வெளி யாகி இருந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலைப்பணி தொடங்குவதற்காக ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன. மேலும் சாலைகளை இயந்திரங்கள் மூலமாக கீறி போடப்பட்டன. தற்போது மீண்டும் பணிகளை தொடராமல், அரைகுறையாக நிறுத்தி விட்டனர்.இதனால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சறுக்கி விழுவதும், காயமடைவதும், வாகன ங்கள் பஞ்சர் ஆவதும், பழுதடைவதும் தொடர்கதையாக உள்ளது.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில்," மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப்பணிகளில் அலட்சியம் காட்டும் ஒப்பந்ததாரர் மீதும், கண்டு கொள்ளாத நெடுஞ்சா லைத் துறை அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப்பணிகள் தாமதமாகும் பட்சத்தில் மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்படும்" என்றார்.
நன்றி :  தீக்கதிர் 
பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி இரண்டு ஏடிஎம் 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது.

பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி இரண்டு ஏடிஎம் 2000 ரூபாய் நோட்டுகள் வருகிறது.



பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி இரண்டு ஏடிஎம் பணம் வருகிறது. பேராவூரணி  ஐசிஐசிஐ பேங்க்  அருகில்  இயங்கிவரும்  ஏடிஎம் மையத்தில், புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள  ஏடிஎம் மையத்தில்  தற்போது 2000 ரூபாய் நோட்டுகள்  கிடைக்கிறது.   
தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையம்

தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையம்


பேராவூரணி  அடுத்த புனல்வாசலில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் சவரிமுத்து தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் செபஸ்தியர், வேதமணி, ஆல்பர்ட் அந்தோணிசாமி, ஆரோக்கியசாமி, பிலோமின்மேரி, ரெஜினாமேரி, சிமியோன், ராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

பேராவூரணியில் தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் நெல் கொள்முதல் செய்வதுபோல, பேராவூரணியில் தேங்காய் உற்பத்தி விரிவாக்க மையத்தை ஏற்படுத்தி கேரளாவை போல் உரித்தேங்காயாகவும், மட்டை நீக்கிய தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.16 ஆயிரத்திற்கும், கொப்பரை குவிண்டால் ரூ.
24 ஆயிரத்திற்கும் அரசே கொள்முதல் செய்து தென்னை விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக ஜுன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி நின்றுபோன நிலையில் ஒருபோக சாகுபடிக்கும் காவிரி தண்ணீர் கிடைக்காமல் பெருத்த வருவாய் இழப்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், கூட்டுறவு சங்கங்களிலும் மற்ற வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் வேளாண்மைதுறை இயக்குனருக்கும், தஞ்சை மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன் 

Sunday, November 20, 2016

பேராவூரணி அட்லாண்டிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புகைப்படம்.

பேராவூரணி அட்லாண்டிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புகைப்படம்.















பேராவூரணி அட்லாண்டிக்  இன்டர்நேஷனல்  சி.பி.எஸ்.இ பள்ளியில்  2 நாட்கள் அறிவியல்  கண்காட்சி  நடைபெற்றது.  இந்த கண்காட்சியில்  பள்ளி மாணவர்கள்  அறிவியல்  படைப்புகள்  கண்காட்சியில்  வைக்கப்பட்டிருந்தன. இந்த  கண்காட்சியில்  மாணவர்கள்,  பெற்றோர்கள் மற்றும்  பொதுமக்கள்  கலந்துபுகைப்படம்