புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் மாவட்ட அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வேளாண் இணை இயக்குநர், திட்ட இயக்குநர் (அட்மா) நா. அண்ணாமலை தலைமை வகித்துப் பேசினார்.
தொடர்ந்து வேளாண் துணை இயக்குநர் உதயகுமார், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம், கிரிட் முறையில் மண் மாதிரிகள் எடுத்தல், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், பயிர் விளைச்சல் போட்டி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வேளாண் அலுவலர் எஸ். ராஜசேகரன், வேளாண் துறைத் திட்டங்கள், சம்பா தொகுப்பு திட்டம், இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்புக்கான உழவு மானியம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், விதை விநியோகம் செய்தல், வேளாண் இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வேளாண் அலுவலர் (தரக்கட்டுபாடு) பாண்டி, டி.ஏ.பி, பொட்டாஷ், கலப்பு உரங்களுக்கான உர நிர்ணய விலையை நிறுவனங்கள் வாரியாக விற்கப்படுவது குறித்தும் பேசினர்.
இதில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ். அருணாச்சலம், வேளாண் விற்பனை வணிகத் துறை துணை இயக்குநர் எஸ். சிங்காரம், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் வி. ரமேஷ், விதைச் சான்றளிப்பு அங்கக சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் என். விநாயகமூர்த்தி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மண்டல அறிவியல் நிலையப் பேராசிரியரும், தலைவருமான எம். குமரேசன் ஆகியோர் தங்களது துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில், அனைத்து வட்டாரங்களைச் சார்ந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
0 coment rios: