பேராவூரணிக்கு ₹1 கோடி செலவில் புதிய காவல்நிலையம் கட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கையில் சம்பந்தப்பட்ட துறைகளின் பொறுப்பை கூடுதலாக கவனித்துவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் பதிலுரை வழங்கினார். அப்போது தமிழக காவல்துறையில் 2016-17 ஆண்டில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு பேசினார்.
இந்த பதிலுரையின் மீது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, "பேராவூரணியில் ஓட்டு கட்டிடத்தில் எவ்வித வசதியுமின்றி செயல்பட்டுவரும் பழைய பேராவூரணி நகர காவல்நிலையத்திற்கு பதிலாக ₹1 கோடி செலவில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்ட புதிய காவல்நிலையம் விரைவில் கட்டப்படும் " என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பை, பேராவூரணி நகர பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
0 coment rios: