அக்டோபர் மாதம் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுதபூஜை பண்டிகையும், 11-ம் தேதி விஜயதசமியும், 12-ம் தேதி மொகரம் பண்டிகையும் கொண் டாடப்படுகிறது. இதனால் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் தேதி இரண்டாவது சனிக் கிழமை என்பதாலும், மறுநாள் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். இதனால் வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாள் தொடர் விடுமுறை வருகிறது.
இதனால் வங்கிப் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஏடிஎம் மையங்களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.
இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கிகளுக்கு ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொகரம் பண்டிகைக்கு 3 நாள்தான் விடுமுறை. ஆனால், அதற்கு முன்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வருவதால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், விடுமுறை நாட்களில் வாடிக்கை யாளர்கள் பாதிக்காத வகையில் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் போதிய அளவு பணம் இருப்பில் வைக்கப்படும்.
மேலும், தற்போது பெரும் பாலான வங்கிகளின் வெளியே பணம் செலுத்துவதற்கும், பாஸ் புத்தகத்தை பதிவு செய்வதற்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் எளிதாக பணத்தை செலுத்தலாம். அத்துடன், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்-லைன் சேவை செயல்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
0 coment rios: