பேராவூரணி அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை பேருந்து பேராவூரணியிலிருந்து காலை 11.20 மணிக்கு கும்பகோணத்திற்கு இயக்கப்பட்டு, அங்கிருந்து மாலை 4.05 மணிக்கு மீண்டும் பேராவூரணிக்கு இயக்கப்பட்டு வந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கும்பகோணத்தில் இருந்து பேராவூரணிக்கு எதிர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து பட்டுக்கோட்டையோடு திரும்பச் சென்று விடுகிறது. இதனால், பேராவூரணியில் இருந்து கும்பகோணத்திற்குச் செல்லும் மக்கள் மீண்டும் பேராவூரணி திரும்ப, பட்டுக்கோட்டையில் பேருந்து மாறவேண்டியது உள்ளது.
இதனால், பெண்கள், வயதானவர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, வழக்கம்போல கும்பகோணத்திலிருந்து நேரடியாக பேராவூரணிக்கு பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 coment rios: