பேராவூரணிக்கு பெருமை சேர்த்த இரு வாலிபர்கள்.
நாணய சேகரிப்பாளர்களுக்கு சான்றிதழ்
சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
பேராவூரணி ஆகஸ்ட் 9-
பேராவூரணியை சேர்ந்த நாணய சேகரிப்பாளர்கள் காசு சு.கதிரேசன், எல்.ஏ.எம்.சாதிக் அலி ஆகியோரை பாராட்டி சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில், சான்றிதழ் மற்றும் பரிசுக் கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் சோழமண்டல நாணயவியல் கழகம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 5 முதல் 7 ந்தேதி வரை மூன்று தினங்கள் தஞ்சை விஜயா திருமண மண்டபத்தில் பன்னாட்டு மாபெரும் நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் நாணயவியல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் சேமிப்பான பழங்கால நாணயங்கள், பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் ஆகியவற்றை பார்வைக்கு வைத்திருந்தனர். இதனை ஏராளமான மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
பேராவூரணியை சேர்ந்த காசு எஸ்.கதிரேசன் தனது பழங்கால சேமிப்பு நாணயங்களையும், சுமார் 13 ஆயிரம் பழைய 20 பைசா நாணயங்களையும் காட்சிக்கு வைத்திருந்தார். காசு எஸ்.கதிரேசன் 20 பைசா நாணயங்களை கூடுதலான அளவில் சேகரித்து கின்னஸ் உலக சாதனைக்கு முயன்று வருகிறார்.
அதேபோல் ஜவுளி வணிகரான எல்.ஏ.எம்.சாதிக் அலி 15 நாடுகளை சேர்ந்த விதவிதமான கரன்சி நோட்டுகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தார்.
இவர்களைப் பாராட்டி தஞ்சையில் நடைபெற்ற கண்காட்சியில் சோழமண்டல நாணயவியல் கழக நிறுவனர் மு.துரைராசு, தலைவர் க.சக்திவேல், செயலாளர் இ.குழந்தைசாமி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக்கேடயங்கள் வழங்கப்பட்டது.
0 coment rios: