Latest Posts

Wednesday, June 20, 2018

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.

பேராவூரணி தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு பயிற்சி.



பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயிலில் தீயணைப்பு மீட்பு துறை அலுவலர்கள் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் தீ பிடித்தால் எப்படி அணைப்பது தடுப்பது விளக்க விழிப்புணர்வு செய்முறை பயிர்ச்சி நடத்தி காட்டினார்கள். இந்த நிகழ்வில் நீலகண்டப்பிள்ளையார் திருக்கோயில் செயல்அலுவலர் திரு. கவியரசு தலைமையிலும் மற்றும் ஸ்தானிகர் சங்கரன் வகைறாக்கள் தீயணைப்பு அதிகாரிகள் திருக்கோயில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி காணப்படுகிறது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

பேராவூரணியில் கட்டி முடிக்கப்பட்ட ரயில் நிலையம் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தின் கடைசி மீட்டர் கேஜ்பாதை என சொல்லப்பட்ட காரைக்குடி - திருவாரூர் இடையே கடந்த மார்ச் 2012 ஆம் ஆண்டு, அகல ரயில் பாதைஅமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே ரயில் பாதைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 70 கி.மீ தூரத்தில் சிறியதும், பெரியதுமான பாலங்கள் 40 க்கும் மேற்பட்டவை அமைக்கப் பட்டன. அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் பெரிய அளவில்ரயில்வே நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. கண்டனூர் - புதுவயல், வாளராமாணிக்கம், மேற்பனைக்காடு, ஒட்டங்காடு இடையே சிறிய ரயில்வே நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை- திருவாரூர் இடையேயான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே பயணிகள் ரயில் வெள்ளோட்டமும் விடப்பட்டு, இரண்டு மாத காலம்ஆன நிலையில் இதுவரை மீண்டும் ரயில் இயக்கப்படவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தாமதமாவதாக கூறப்படுகிறது. இது ஒரு புறமிருக்க, கட்டி முடிக்கப் பட்ட ரயில் நிலையங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பராமரிப்பின்றி சீரழிந்து வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள புதிய ரயில் நிலைய அலுவலக கண்ணாடி ஜன்னல் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே அலுவலர்களோ, பணியாளர்களோ, காவலர்களோ இல்லாத நிலையில் இரவுநேரங்களில் சமூக விரோதச் செயல் கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காலை, மாலை நேரங்களில் சமூக விரோதிகள் ரயில்வே நிலையத்தில் அமர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சமூக விரோதிகள் அலுவலக கதவுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உறங்குவதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு இல்லாததால் ரயில்வே நிலையத்தில் நடைபெற்று வரும் சமூக விரோதச் செயல்களை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகள் முன் வர வேண்டும். விரைவில் ரயில் சேவையை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.



பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு.

பேராவூரணி ஸ்போட்ஸ் கிளப் கபாடி விளையாட்டு வீரர்கள் அணிக்கான வீரர்கள் தேர்வு. பேராவூரணி சுற்றுவட்டார கபாடி வீரர்கள் கலந்துகொள்ளவும்.

Tuesday, June 19, 2018

Friday, June 15, 2018

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.

பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.



பேராவூரணி ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா 03.07.2018 முதல் 20.07.2018 வரை.



பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மறியல்.

பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சியில் கடந்த 15 நாளாக முறையாக குடிநீர் வரவில்லை. மோட்டார் பழுது காரணமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால், தண்ணீர் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், வெள்ளியன்று காலை பேராவூரணி - புதுக்கோட்டை மெயின் சாலையில், அம்மையாண்டி கடை வீதியில் காலிக் குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அ.ராமலிங்கம், சிபிஎம் கிளைச் செயலாளர் ஆத்மநாதன், சத்தியசீலன், கே.மாரிமுத்து, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.முருகேஸ்வரி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தகவலறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் குமரவடிவேல் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மின் மோட்டார் அமைத்து இரு தினங்களுக்குள் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.